/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ யானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
யானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
யானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
யானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 09, 2025 06:58 AM

பந்தலுார்; பந்தலுார் அருகே யானை தாக்கியதில், முதியவர் பலியானார்.
பந்தலுார் அருகே உள்ளது சந்தக்குன்னு கிராமம். நேற்றிரவு, இப்பகுதியை சேர்ந்த ஜோய் 60, அருகிலுள்ள காபி தோட்டம் வழியாக, வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, கொம்பன் யானை தாக்கியதில் படுகாயமடைந்த இவரை, வனத்துறையினர் மீட்டு, பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர், பலியானதாக தெரிவித்துள்ளார்.
வனத்துறையினர், யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவருக்கு சோசம்மா என்ற மனைவியும், அலன் 18, அலீனா 17 ஆகிய குழந்தைகளும் உள்ளனர். மருத்துவமனை மற்றும் பிதர்காடு பகுதியில், போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.