/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 45 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது 45 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது
45 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது
45 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது
45 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது
ADDED : ஜூன் 09, 2025 12:48 AM
கோத்தகிரி; கோத்தகிரியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 45 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், தடை செய்யப்பட்ட ஹன்ஸ் உள்ளிட்ட போதை வஸ்துக்களில் புழக்கம் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த, போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, கோத்தகிரி டானிங்டன் பகுதியில், எஸ்.ஐ., யுவராஜா தலைமையில் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து, கோத்தகிரி நோக்கி வந்து கொண்டிருந்த காரை சோதனை செய்தபோது, 45 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
போலீசார் நடத்தி விசாரணையில், கேர்கம்பை பகுதியை சேர்ந்த, ராஜேந்திரன், 51, என்பவர், தனது காரில் புகையிலை பொருட்கள் கொண்டு வந்தது தெரிய வந்தது. வழக்கு பதிவு செய்த, போலீசார் அவரை கைது செய்து புகையிலை பொருட்களையும், காரையும் பறிமுதல் செய்தனர்.