Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஊழியர்கள் பலர் தொடர் விடுமுறையால்... பஸ் இயக்கத்தில் சிக்கல்!பொங்கல் முடியும் வரை திணறல் தொடரும்

ஊழியர்கள் பலர் தொடர் விடுமுறையால்... பஸ் இயக்கத்தில் சிக்கல்!பொங்கல் முடியும் வரை திணறல் தொடரும்

ஊழியர்கள் பலர் தொடர் விடுமுறையால்... பஸ் இயக்கத்தில் சிக்கல்!பொங்கல் முடியும் வரை திணறல் தொடரும்

ஊழியர்கள் பலர் தொடர் விடுமுறையால்... பஸ் இயக்கத்தில் சிக்கல்!பொங்கல் முடியும் வரை திணறல் தொடரும்

ADDED : ஜன 02, 2024 10:30 PM


Google News
ஊட்டி:நீலகிரி அரசு போக்குவரத்து கழகங்களில், பல்வேறு காரணங்களுக்காக விடுமுறை எடுக்கும் ஊழியர்களால், பொது போக்குவரத்தை சமாளிக்க அதிகாரிகள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகியில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட போக்குவரத்து கழக கிளைகளில், 270 வழித்தடத்தில், 320 பஸ்கள் இயக்கப்படுகிறது.

அரசு போக்குவரத்து கழகங்களில், சராசரியாக, 1,000 டிரைவர், கண்டக்டர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில், தற்போது, 40 சதவீதம் காலி பணியிடங்கள் கடந்த பல ஆண்டுகள் நிரப்பபடாமல் உள்ளன.

காலி பணியிடங்கள் நிரப்பாமல் நிலவும் சிக்கல் ஒருப்புறம் இருக்க, மறுப்புறம் பல்வேறு காரணங்களால் விடுமுறை எடுக்கும் ஊழியர்களால் வழித்தட பேருந்துகளை முறையாக இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், அதிகாரிகளின் நிர்பந்தத்தில் தொடர்ந்து பணி செய்ய வேண்டிய நிலைக்கு, பல ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சமாளிக்க முடியுமா?


தற்போது, நீலகிரி போக்குவரத்து கழகங்களில், 50 சதவீதம் பேர் ஆன்மிக தலங்களுகு செல்ல மாலை அணிந்து விரதம் உள்ளனர். புத்தாண்டு தினத்தில் இருந்து துவங்கிய பயணம் இம்மாதம், 17ம் தேதி பொங்கல் முடியும் வரை தொடர உள்ளது.

அதில், கோவில்களுக்கு செல்ல தொடர் விடுமுறை கேட்டு ஏற்கனவே அந்தந்த போக்குவரத்து கழக கிளை அலுவலகங்களில் ஊழியர்கள் கடிதம் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு அதிகாரிகள் விடுமுறை அளிக்க வேண்டி உள்ளது.

இதனால், இனி வரும் நாட்களில், போக்குவரத்து கழகங்களில் டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை ஏற்படுவதால், அதிகாரிகள் பஸ் இயக்கத்தை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'ஊழியர்கள் பற்றாக்குறை சமயங்களில், கிராமப்புற பேருந்து இயக்கம் தடை படுகிறது.

பணிக்கு வரும் ஊழியர்களை வெளி மாவட்ட பஸ்களை இயக்க அனுப்புகின்றனர். பொது போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,' என்றனர்

போக்குவரத்து கழக பொது மேலாளர் நடராஜ் கூறுகையில், ''பொதுவாக ஜன., முதல் வாரத்திலிருந்து பொங்கல் வரை, பலர் ஆன்மிக தலங்களுக்கு செல்வதால் இதுபோன்ற சூழ்நிலை ஆண்டு தோறும் ஏற்படுவது வழக்கம் தான்.

தற்போது உள்ள பற்றாக்குறையை சமாளிக்க அதிகாரிகளை ஒன்றிணைத்து ஆலோசனை நடத்தி பஸ்களை வழித்தடத்தில் சரிவர இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us