/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வழக்குக்கு ஆஜராகாமல் 'டிமிக்கி' ; இன்ஸ்பெக்டர்; -எஸ்.ஐ.,க்கு பிடிவாரன்ட்வழக்குக்கு ஆஜராகாமல் 'டிமிக்கி' ; இன்ஸ்பெக்டர்; -எஸ்.ஐ.,க்கு பிடிவாரன்ட்
வழக்குக்கு ஆஜராகாமல் 'டிமிக்கி' ; இன்ஸ்பெக்டர்; -எஸ்.ஐ.,க்கு பிடிவாரன்ட்
வழக்குக்கு ஆஜராகாமல் 'டிமிக்கி' ; இன்ஸ்பெக்டர்; -எஸ்.ஐ.,க்கு பிடிவாரன்ட்
வழக்குக்கு ஆஜராகாமல் 'டிமிக்கி' ; இன்ஸ்பெக்டர்; -எஸ்.ஐ.,க்கு பிடிவாரன்ட்
ADDED : ஜன 25, 2024 12:12 AM
ஊட்டி : கொலை வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர்;- எஸ்.ஐ.,க்கு ஊட்டி செஷன்ஸ் கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
நீலகிரி மாவட்டம், சேரம்பாடி முருகம்பாடி பகுதி பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த ஓணன், இவருடைய சகோதரர் வெளுக்கன் ஆகியோருக்கு இடையே, விவசாயம் செய்வதில் இடப்பிரச்னை இருந்து வந்தது. கடந்த, 2018ம் ஆண்டு ஆக., 21ம் தேதி விறகு வெட்டி எடுத்து, வீட்டுக்கு வந்த சந்திரன், ஓணனின் மகன் மனுவை சந்தித்தார்.
நிலப்பிரச்னை சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திமடைந்த சந்திரன், சகோதர மகனான மனுவை அறிவாளால் வெட்டி கொலை செய்தார்.
சேரம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்தி சந்திரனை கைது செய்தனர். அப்போது, இன்ஸ்பெக்டராக வெற்றிவேல் ராஜன், எஸ்.ஐ.,யாக ராஜேஷ்குமார் ஆகியோர் கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்திவந்தனர். ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் கடந்த, 5 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
வழக்கு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இருவருக்கு ஊட்டி கோர்ட் மூன்று முறை சம்மன் அனுப்பியும் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இந்நிலையில், தற்போது, திருச்செந்துாரில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் வெற்றிவேல் ராஜன்; கோவையில் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வரும் ராஜேஷ்குமார் ஆகிய இருவருக்கும், ஊட்டி செஷன்ஸ் கோர்ட் நீதிபதி அப்துல்காதர் நேற்று பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.