/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பா.ஜ., மாவட்ட தலைவர் தாக்கப்பட்ட சம்பவம்; ஊட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்பா.ஜ., மாவட்ட தலைவர் தாக்கப்பட்ட சம்பவம்; ஊட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்
பா.ஜ., மாவட்ட தலைவர் தாக்கப்பட்ட சம்பவம்; ஊட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்
பா.ஜ., மாவட்ட தலைவர் தாக்கப்பட்ட சம்பவம்; ஊட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்
பா.ஜ., மாவட்ட தலைவர் தாக்கப்பட்ட சம்பவம்; ஊட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 02, 2024 10:34 PM

ஊட்டி:ஊட்டியில் பா.ஜ., மாவட்ட தலைவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊட்டி- - -கூடலுார் சாலையில் 'மான்டிரோசா' பகுதியில் பா.ஜ., மாவட்ட தலைவர் மோகன்ராஜ் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.
கடந்த, 31ம்தேதி நள்ளிரவு ஆங்கில புத்தாண்டு பிறப்பை ஒட்டி, அங்குள்ள கிறிஸ்துவ சபைக்கு வந்த சிலர், வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்னையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதில், மோகன்ராஜ், அவரின் சகோதரர் முகேஷ் ஆகியோர் தாக்கப்பட்டு காயமடைந்து, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக, காந்தள் பகுதியை சேர்ந்த நித்தீஸ், ௨௩, எபினேசர் ௨௧, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று ஊட்டி ஏ.டி.சி.,யில் பா.ஜ., மாவட்ட தலைவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பா.ஜ., மாவட்ட பொது செயலாளர் ஈஸ்வரன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுச்சாமி, ஆர்.எஸ்.எஸ்., கோவை கோட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.