/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பழுதாகி நின்ற சரக்கு லாரி போக்குவரத்து பாதிப்புபழுதாகி நின்ற சரக்கு லாரி போக்குவரத்து பாதிப்பு
பழுதாகி நின்ற சரக்கு லாரி போக்குவரத்து பாதிப்பு
பழுதாகி நின்ற சரக்கு லாரி போக்குவரத்து பாதிப்பு
பழுதாகி நின்ற சரக்கு லாரி போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜன 04, 2024 10:51 PM

மஞ்சூர்:மஞ்சூர் சாலையில் லாரி பழுதாகி நின்றதால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மஞ்சூர் பகுதியில் உள்ள கடைகளுக்கு கோவையில் இருந்து வாரந்தோறும் லாரிகள் மூலம் சரக்கு கொண்டு வரப்படுகிறது.
அதன்படி, கோவையில் இருந்து நேற்று காலை மஞ்சூர் நோக்கி வந்த சரக்கு லாரி குந்தாபாலத்தில் கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது, அதிக பாரத்தால் பழுதாகி நின்றது. பிரதான சாலை என்பதால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டு, சரக்கு லாரியில் இருந்த பாதி பொருட்களை அந்த லாரியில் ஏற்றப்பட்டது. பழுது சரி செய்த பின் லாரி அங்கிருந்து சென்றது.
லாரி பழுதாகி நின்றதால் மஞ்சூர்- ஊட்டி, குன்னூர் பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் இரண்டு மணி நேர தாமதத்திற்கு பின் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்றது. காலை நேரத்தில் பணிக்கு செல்லும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.