/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மனித -- விலங்கு மோதலை தடுக்க ரூ.6 கோடியில் கட்டுப்பாட்டு மையம்: நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா தகவல்மனித -- விலங்கு மோதலை தடுக்க ரூ.6 கோடியில் கட்டுப்பாட்டு மையம்: நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா தகவல்
மனித -- விலங்கு மோதலை தடுக்க ரூ.6 கோடியில் கட்டுப்பாட்டு மையம்: நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா தகவல்
மனித -- விலங்கு மோதலை தடுக்க ரூ.6 கோடியில் கட்டுப்பாட்டு மையம்: நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா தகவல்
மனித -- விலங்கு மோதலை தடுக்க ரூ.6 கோடியில் கட்டுப்பாட்டு மையம்: நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா தகவல்
ADDED : ஜன 10, 2024 11:47 PM

கூடலுார், : 'கூடலுார், பந்தலுார் பகுதிகளில் மனித-வன விலங்கு மோதலை தடுக்க, 6 கோடி ரூபாயில், கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும்,' என, நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், கூடலுார், பந்தலுாரில் மனித -வன விலங்கு மோதலை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம், நீலகிரி எம்.பி., ராஜா தலைமையில் நடந்தது.
அதன்பின், எம்.பி., ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
பந்தலுார் அருகே, சிறுமி உட்பட இரண்டு பேர் சிறுத்தை தாக்கி உயிரிழந்தனர். நிலைமையை முதல்வர் கண்காணித்து, அவர்கள் குடும்பத்துக்கு தலா, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினார்.
கூடலுார் வன கோட்டத்தில் தொடரும் மனித -வனவிலங்கு மோதலை தடுக்க கண்காணிப்பு பணியில், கூடுதலாக, 60 ஊழியர்கள் நியமிக்கப்படுவர்.
மேலும், கூடலுாரில், 6 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும். 90 இடங்களில் கேமராக்கள் வைக்கப்பட்டு, அவைகள் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்படும்.
24 மணி நேரமும் செயல்படும் மையத்தை மக்கள் தொடர்பு கொள்ள இலவச எண் வழங்கப்படும். வனவிலங்கு நடமாட்டம் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து தகவல் கிடைத்தவுடன் உடனடியாக, வன ஊழியர்கள் அப்பகுதிக்கு சென்று தேவையான நடவடிக்கை எடுக்க இரண்டு புதிய வாகனங்கள் வழங்கப்படும். மேலும், நீலகிரி எஸ்.பி., கேட்டுக் கொண்டதன்படி வனத்துறை ஒத்துழைப்பதற்காக, கூடலுாருக்கு ஒரு கம்பெனி போலீஸ் வழங்கப்படும்.
மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வனவிலங்குகளை பிடிப்பது தொடர்பான அதிகாரிகள் உத்தரவை, போன் மூலம் பெற்று, காலதாமதம் இன்றி, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் (புலிகள் திட்டம்) ராகேஷ்குமார் டோக்ரோ, நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா, முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ், நீலகிரி எஸ்.பி., சுந்தரவடிவேல், கூடலுார் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் ஆகியோர் பங்கேற்றனர்.