/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பொங்கலுக்கு வந்த தரமற்ற கரும்பு மாற்றி வழங்க கலெக்டர் உத்தரவுபொங்கலுக்கு வந்த தரமற்ற கரும்பு மாற்றி வழங்க கலெக்டர் உத்தரவு
பொங்கலுக்கு வந்த தரமற்ற கரும்பு மாற்றி வழங்க கலெக்டர் உத்தரவு
பொங்கலுக்கு வந்த தரமற்ற கரும்பு மாற்றி வழங்க கலெக்டர் உத்தரவு
பொங்கலுக்கு வந்த தரமற்ற கரும்பு மாற்றி வழங்க கலெக்டர் உத்தரவு
ADDED : ஜன 07, 2024 01:25 AM
ஊட்டி;ஊட்டிக்கு பொங்கல் பண்டிகைக்காக தரமற்ற கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது ஆய்வில் தெரியவந்ததால், அதிருப்தி அடைந்த கலெக்டர், தரமில்லாதவற்றை மாற்றி வழங்க அதிகாரிக்கு அறிவுறுத்தினார்.
மாநில அரசு பொங்கல் பண்டிகைக்காக, 'ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன், 1,000 ரூபாய் ரொக்கம்,' என, பொங்கல் தொகுப்பு அறிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், கூட்டுறவு துறை மூலம், பொங்கல் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா, பொங்கல் தொகுப்பு பொருட்களை, ஊட்டி என்.சி.எம்.எஸ்., வளாகத்தில் நேற்று காலை ஆய்வு செய்தார். அப்போது, கொள்முதல் செய்யப்பட்ட பல 'கரும்பு கட்டுகள்' தரமில்லாமல் இருந்தது தெரியவந்தது.
அதிருப்தி அடைந்த கலெக்டர், 'இங்கு தரமில்லாமல் உள்ள கரும்புகளை உடனடியாக மாற்றிய பின் மக்களுக்கு வழங்க வேண்டும்,' என, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதனிடம் அறிவுறுத்தினார்.