/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/காலநிலை மாற்றம் பூமியின் அழிவுக்கு காரணம்; சுற்றுச்சூழல் கருத்தரங்கில் அதிர்ச்சி தகவல்காலநிலை மாற்றம் பூமியின் அழிவுக்கு காரணம்; சுற்றுச்சூழல் கருத்தரங்கில் அதிர்ச்சி தகவல்
காலநிலை மாற்றம் பூமியின் அழிவுக்கு காரணம்; சுற்றுச்சூழல் கருத்தரங்கில் அதிர்ச்சி தகவல்
காலநிலை மாற்றம் பூமியின் அழிவுக்கு காரணம்; சுற்றுச்சூழல் கருத்தரங்கில் அதிர்ச்சி தகவல்
காலநிலை மாற்றம் பூமியின் அழிவுக்கு காரணம்; சுற்றுச்சூழல் கருத்தரங்கில் அதிர்ச்சி தகவல்
ADDED : ஜன 10, 2024 10:38 PM
கோத்தகிரி : கோத்தகிரி அரவேனு அரசு உயர்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் கருத்தரங்கு நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
சமீபத்தில், ஆலன் அர்பன் என்ற சுற்றுச்சூழல் ஆய்வாளர், தமது வலைதளத்தில் எழுதிய 'விரைவில் மனித குலம் நிலை குலையப்போகிறதா' என்ற கட்டுரை உலக அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
காலநிலை மாற்றம்தான் நமது பூமியின், ஆறாவது அழிவுக்கு காரணமாகிறது. பூமி நமது தேவைக்கான வளங்களை, ஒரு ஆண்டில் உற்பத்தி செய்வதை மனிதகுலம், மூன்று மாதத்தில் நுகர்கிறது. இதனால், இயற்கை வளங்கள் மிக வேகமாக அழிந்து வருகிறது. பெட்ரோலியமும், நிலக்கரியும் தீர்ந்து வருகிறது.
வளைகுடா நாடுகள் பெட்ரோல் டீசலை எடுக்க மிக அதிக ஆழம் கிணறு தோண்ட வேண்டிய நிலை உள்ளது. விலை கட்டுபடியாகாததால், அந்த நாடுகள் உற்பத்தியை குறைத்து வருகின்றன. இதனால், அனைத்து பொருட்களின் விலைவாசி பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், ஏழைகளின் வாழ்வு சிக்கலுக்கு உள்ளாகும் நிலை உள்ளது.
அதிக மழை, அதிக வறட்சி போன்ற காலநிலை மாற்றங்கள், அன்றாட வாழ்வை பாதிக்கும். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விவசாயம் நலிவடையும். புவி வெப்பம் அதி வேகத்தில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
தற்போது, உலக மக்கள் தங்கள் வாழ்நாளிலேயே, மனித குலத்தின் அழிவை காணும் அபாயமுள்ளது. மக்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே, காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவும் பூமியை காக்கவும் முடியும். இவ்வாறு, அவர் பேசினார். இதில், மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.