/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நாள் உறுதிமொழி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நாள் உறுதிமொழி
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நாள் உறுதிமொழி
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நாள் உறுதிமொழி
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நாள் உறுதிமொழி
ADDED : ஜூன் 16, 2025 08:14 PM
கோத்தகிரி; கோத்தகிரி ஒரசோலை அரசு நடுநிலை பள்ளியில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நாளை ஒட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமை வகித்து பேசுகையில், ''இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009ல் படி, 18 வயதுக்கு உட்பட்ட எந்த குழந்தையும், பள்ளியில் சேராமலும், படிக்காமலும் இருக்கக் கூடாது. எந்த காரணம் கொண்டு படிப்பதை விட்டு விட்டு குழந்தை தொழிலாளராக வேலை செய்யக்கூடாது. இவ்வாறு வேலை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களின் பெற்றோருக்கு, 500 ரூபாய் அபராதத்துடன், ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால், குழந்தைகள் கல்வி பயில ஏதுவாக, பள்ளியில் சேர்க்க பெற்றோர் முன் வர வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர் இந்து சுரேஷ், மருத்துவர் திவ்யா, உறுப்பினர் காரி ஆசிரியர் கமலா உட்பட, மாணவ மாணவியர் பலர் பங்கேற்றனர்.