ADDED : ஜன 02, 2024 10:41 PM
பந்தலுார்;பந்தலுார் பஜார் பகுதியில் தெருவிளக்கு இல்லாததால் இரவில் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தமிழகம், கேரளா சாலையில் பந்தலுார் பகுதி அமைந்துள்ளது. இங்கு தாசில்தார் அலுவலகம் நகராட்சி மற்றும் அரசு தலைமை மருத்துவமனை, நீதிமன்றம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், சிவில் சப்ளை குடோன் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அமைந்துள்ளது.
இந்த பகுதியில் அவ்வப்போது சிறுத்தை மற்றும் கரடிகள் இரவு நேரத்தில் உலா வருவது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், பஜார் பகுதியில் தெருவிளக்குள் எரியாத நிலையில் உள்ளூர் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இதனால், இரவு நேரங்களில் கடைகள் அடைக்கும் வரை, கடைகளின் மின் விளக்கு வெளிச்சத்தில் பஜார் பகுதியில் வெளிச்சம் காணப்படுகிறது. கடைகள் அனைத்தும் அடைத்து விட்டால் இருள் சூழ்ந்து, வனவிலங்குகள் நடமாட்டத்தை கூட அறிந்து கொள்ள இயலாத நிலை ஏற்படுகிறது.
எனவே, பஜார் பகுதியில் புதிய தெரு விளக்குகளை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.