/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நல்லாசிரியருக்கு பாராட்டு விழா; பள்ளி நிர்வாகம், மக்கள் ஊர்வலம் நல்லாசிரியருக்கு பாராட்டு விழா; பள்ளி நிர்வாகம், மக்கள் ஊர்வலம்
நல்லாசிரியருக்கு பாராட்டு விழா; பள்ளி நிர்வாகம், மக்கள் ஊர்வலம்
நல்லாசிரியருக்கு பாராட்டு விழா; பள்ளி நிர்வாகம், மக்கள் ஊர்வலம்
நல்லாசிரியருக்கு பாராட்டு விழா; பள்ளி நிர்வாகம், மக்கள் ஊர்வலம்
ADDED : செப் 11, 2025 09:18 PM

பந்தலுார்; மாநில நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி முதல்வருக்கு, பள்ளி நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து பாராட்டு விழா நடத்தினர்.
பந்தலுார் அருகே உப்பட்டி எம்.எஸ்.எஸ். மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியின் முதல்வர் கவிதாவிற்கு ஆசிரியர் தினத்தன்று, மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. விருது பெற்று திரும்பிய முதல்வருக்கு, பள்ளி நிர்வாகம், ஊர் பொதுமக்கள், கோவில் கமிட்டி மற்றும் பள்ளிவாசல் கமிட்டி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பந்தலுாரில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு, பின்னர் உப்பட்டியில், செண்டை மேளம் மற்றும் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
உப்பட்டி கோவில் கமிட்டி சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த பாராட்டு விழாவில் பள்ளி துணை முதல்வர் ருக்மணி வரவேற்றார். பள்ளி தாளாளர் டாக்டர் அன்வர் தலைமை வகித்தார்.
நெல்லியாளம் நகர மன்ற தலைவர் சிவகாமி, முன்னாள் எம். எல். ஏ. திராவிடமணி, உட்பட பலர் பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி சேர்மன் ஆலி நன்றி கூறினார்.