/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை அவசியம்; விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை அவசியம்; விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம்
பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை அவசியம்; விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம்
பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை அவசியம்; விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம்
பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை அவசியம்; விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம்
ADDED : செப் 11, 2025 09:19 PM
ஊட்டி; நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடந்தது.
துணை தலைவர்கள் சுரேந்திரன், அசோக் முன்னிலை வகித்தனர். பொருளாளர் காந்தராஜன் ஆண்டு அறிக்கையை வாசித்தார்.
கூட்டத்தில், 'விவசாயிகளுக்கு உரம், இடுப்பொருட்கள், விவசாய பயன்பாடு இயந்திரங்களுக்கு ஜி.எஸ்.டி., வரி குறைப்பு அளித்த மத்திய அரசுக்கும், நீலகிரி விவசாயிகள் சார்பாக மத்திய அமைச்சரை சந்தித்து தேயிலைக்கு உரிய விலை கிடைக்க மனு அளித்து விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
விதைகள், மருந்துகள் விலை உயர்வால், விவசாயிகள் பாதிக்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள், தங்களது விலைப் பொருட்களை விற்கும் போது வியாபாரிகள் முழுத்தொகை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானிய திட்டங்கள் அனைத்தையும் முழுவதுமாக பயன்படுத்த வேண்டும்.
மேட்டுப்பாளையம் செல்லும் விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்து திரும்பும் போது, ஊட்டிக்கு வர போதுமான பஸ்கள் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, மேட்டுப்பாளையத்திலிருந்து, ஊட்டிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்,' என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் பாபு உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.