பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜன 07, 2024 11:33 PM
ஊட்டி;-கலெக்டர் அருணா அறிக்கை; தேசிய வேளாண் மேலாண்மை விரிவாக்க பயிற்சி நிலையம் சார்பில், வேளாண் இடுப்பொருட்கள் குறித்து அடிப்படை அறிவை விற்பனையாளர்களுக்கு அளிக்கும் வகையில், ஓரு வருடம் பட்டய படிப்பு நடத்தப்படுகிறது.
தற்போது, புதுவிதமான பூச்சி மற்றும் நோய்கள் தாக்குகின்றன.
இதனால், வேளாண்மையில் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தி, விவசாயிகள் பயன்பெறும் வகையில், தேவையை அறிந்து, தேவையான நேரங்களில் இடுப்பொருள்கள் வழங்க ஏதுவாக, ஒரு ஆண்டு பட்டய படிப்பு அளிக்கப்படுகிறது. நீலகிரி விற்பனையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இப்படிப்பு, சுயநிதி மூலம் மத்திய அரசின் 50 சதவீத மானிய நிதியில் நடத்தப்படுகிறது. குறைந்தபட்ச கல்வி தகுதி, 10ம் வகுப்பு தேர்வு எழுதி இருக்க வேண்டும்.
இந்த வகுப்புகள், வாரத்தில் சனி அல்லது ஞாயிறு தவிர, விற்பனை விடுமுறை நாட்களில் நடத்தப்படும். ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்று பயன் பெறலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.