/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மாவட்ட திட்ட மேலாண்மை பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்புமாவட்ட திட்ட மேலாண்மை பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு
மாவட்ட திட்ட மேலாண்மை பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு
மாவட்ட திட்ட மேலாண்மை பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு
மாவட்ட திட்ட மேலாண்மை பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜன 30, 2024 11:01 PM
ஊட்டி;துாய்மை பாரத இயக்கத்தில் செயல்படும், மாவட்ட திட்ட மேலாண்மை அலகு தொடர்பு குழு பிரிவு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
ஒரு திட்டமிடல் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் பணியிடத்திற்கு, ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து, பி.டெக்.,எம்.பி.ஏ., மற்றும் எம்.எஸ்.சி., பட்டம் பெற்றவர்கள்; பல்கலைக்கழக மானிய குழு சட்டம், 1956 அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளருக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் இருந்து, 35 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் வழங்கப்படும்.
தகவல், கல்வி மற்றும் தொடர்பு:
இந்த குழுவிற்கு இரண்டு தகவல், கல்வி மற்றும் தொடர்பு ஆலோசகர்(ஐ.இ.சி கன்சல்டேட்) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள், மாஸ் கம்யூனிகேஷன், மாஸ் மீடியா துறையில் முதுகலை பட்டம் அல்லது அது சமமான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மக்கள் தொடர்பு தண்ணீர் மற்றும் சுகாதாரம்சமூக அணி திரட்டல்பொதுத்துறை தொடர்பு ஆகியவற்றில் 2-3 வருட அனுபவம் விரும்பத்தக்கது. அல்லது தனியார் துறையில் சமூக ஊடகப் பிரிவுகளில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாத சம்பளம், 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் சான்றொப்பமிட்ட கல்வி தகுதி மற்றும் முன் அனுபவ சான்று ஆவண நகல்களுடன், பிப்.,6ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் 'கூடுதல் ஆட்சியர் (வ)திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஊட்டி,- 643001 என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.