/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சாகச விளையாட்டு கட்டுமான பணிக்கு எதிர்ப்புசாகச விளையாட்டு கட்டுமான பணிக்கு எதிர்ப்பு
சாகச விளையாட்டு கட்டுமான பணிக்கு எதிர்ப்பு
சாகச விளையாட்டு கட்டுமான பணிக்கு எதிர்ப்பு
சாகச விளையாட்டு கட்டுமான பணிக்கு எதிர்ப்பு
ADDED : ஜன 04, 2024 11:08 PM
ஊட்டி:ஊட்டி படகு இல்ல ஏரியை ஒட்டி நடந்து வரும் சாகச விளையாட்டு கட்டுமான பணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி வக்கீல் ஸ்ரீஹரி கலெக்டருக்கு அனுப்பிய மனு:
ஊட்டி படகு இல்லத்தில், 5.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாகச விளையாட்டுக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. ஏரியை ஒட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் பணிக்கு முறையான அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் இந்த விதிமீறல் பணி குறித்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், சென்னை ஐகோர்ட்டில் விரைவில் 'ரிட்' மனு தாக்கல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.