/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கிராம அளவில் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை: பழங்குடி பாரம்பரிய மருத்துவ முகாமில் தீர்மானம்கிராம அளவில் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை: பழங்குடி பாரம்பரிய மருத்துவ முகாமில் தீர்மானம்
கிராம அளவில் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை: பழங்குடி பாரம்பரிய மருத்துவ முகாமில் தீர்மானம்
கிராம அளவில் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை: பழங்குடி பாரம்பரிய மருத்துவ முகாமில் தீர்மானம்
கிராம அளவில் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை: பழங்குடி பாரம்பரிய மருத்துவ முகாமில் தீர்மானம்
ADDED : பிப் 12, 2024 01:25 AM
கோத்தகிரி;'கோத்தகிரியில் நடந்த பழங்குடி பாரம்பரிய மருத்துவர்களுக்கான பயிற்சி முகாமில், கிராம அளவில்சுகாதாரத்தை மேம்படுத்தநடவடிக்கை எடுப்பது,'என, முடிவெடுக்கப்பட்டது.
கோத்தகிரியில், பண்டைய பழங்குடி மக்களின் மூலிகை அறிவை புதுப்பிக்கும் திட்டத்தின் கீழ், பழங்குடி பாரம்பரிய மருத்துவர்களுக்கான கருத்து பயிற்சி முகாம் நடந்தது.
அதில், பெங்களூரு டி.டி.யூ., ஆயுர்வேத பல்கலைக்கழக, முன்னாள் தலைவர் ஹரி ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
முகாமில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நீலகிரியில் வாழும் பாரம்பரிய மருத்துவர்களை ஒருங்கிணைத்து, புதிய மூலிகை தோட்டங்களை உருவாக்கி, மூலிகை மூல பொருட்களை சேகரிப்பதுடன், மதிப்பு கூட்டுவது; கிராம அளவில் சுகாதாரத்தை மேம்படுத்த ஏதுவாக, சாதாரண நோய்களுக்கு தேவையான உதவி வழங்குவது.
பாரம்பரிய மருத்துவர்களின் தனித்தன்மைகளைமேம்படுத்துவது; தொடர்ந்து பயிற்சிகள் வழங்கி, மருந்து உற்பத்தியை அதிகப்படுத்துவதுடன், அழிவின் தருவாயில் உள்ள மூலிகைகளை பாதுகாக்க தீர்மானிக்கப்பட்டது.
மேலும், கிராமப்புற பள்ளிகளில் மூலிகைகளை வளர்த்து, இளைய தலைமுறையினருக்கு மூலிகையின் முக்கியத்துவத்தை உணர்த்துவது; ரத்த சோகையை போக்கி, அரசின் உதவியை பெறுவதுடன், பழங்குடி மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், 'தி கார்டன் ஹோப் டிரஸ்ட்' பொருளாளர் பரமேஸ்வரன், அறங்காவலர்கள் வாசமல்லி, ஆனந்தி, சுகாதார திட்ட இயக்குனர் சத்தியசீலன் உட்பட, பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை, திட்ட மேலாளர் பாலசுப்பிரமணியம் செய்திருந்தார்.