/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/'பாம்பெக்ஸ்' கண்காட்சியில் ஸ்டாம்புகள் அரிய தொகுப்பு'பாம்பெக்ஸ்' கண்காட்சியில் ஸ்டாம்புகள் அரிய தொகுப்பு
'பாம்பெக்ஸ்' கண்காட்சியில் ஸ்டாம்புகள் அரிய தொகுப்பு
'பாம்பெக்ஸ்' கண்காட்சியில் ஸ்டாம்புகள் அரிய தொகுப்பு
'பாம்பெக்ஸ்' கண்காட்சியில் ஸ்டாம்புகள் அரிய தொகுப்பு
ADDED : ஜன 11, 2024 10:13 PM

பாலக்காடு;பாலக்காட்டில் நடந்த'பாம்பெக்ஸ்' கண்காட்சியில், தபால் ஸ்டாம்புகளின் அரிய தொகுப்பு இடம் பெற்றது.
கேரள மாநிலம், பாலக்காடு சந்திரநகர் பார்வதி கல்யாண மண்டபத்தில், பாலக்காடு மற்றும் ஒற்றப்பாலம் பிரிவு தபால் துறை ஒருங்கிணைந்து, 'பாம்பெக்ஸ் 2024' ஸ்டாம்ப் கண்காட்சி நடந்தது.
வெளிநாடுகளுடன் இந்தியா தபால் பரிமாற்றம் தொடங்கிய வரலாறு, புத்தரின் உருவம் பொறித்த அரிய ஸ்டாம்புகள், சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் ரயில்வேயின் கருப்பொருள்கள் கொண்ட ஸ்டாம்புகள், கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் வெளியிடப்பட்ட ஸ்டாம்புகள், மகாத்மா காந்தி ஸ்டாம்புகள் கண்காட்சியில் இடம் பெற்றன.
'ஸ்கவுட் அண்ட் கைடின்' ஆரம்பவும் வளர்ச்சியும், சுதந்திர போராட்ட வீரர்கள், நம் நாட்டின் பாரம்பரிய கலைகள் ஆகியவை அனைத்தும் ஸ்டாம்ப் வடிவில், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
மேலும், யானைகள், பறவைகள், மீன்கள், மற்ற விலங்குகள் ஆகியவையில் விரிவான தொகுப்பும் சிறுவர் தின தொடர்பு கொண்ட ஸ்டாம்புகள், உலகின் பல்வேறு வகை அஞ்சல் அட்டைகள் என, ஸ்டாம்ப் களஞ்சியமாக கண்காட்சி விளங்கியது.
ஆயிரக்கணக்கான மாணவர்கள்கண்காட்சியை பார்வையிட்டனர். இரு நாட்கள் நடந்த கண்காட்சி நேற்று நிறைவு பெற்றது.