/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தாவரவியல் பூங்காவுக்கு 28 லட்சம் பேர் 'விசிட்'தாவரவியல் பூங்காவுக்கு 28 லட்சம் பேர் 'விசிட்'
தாவரவியல் பூங்காவுக்கு 28 லட்சம் பேர் 'விசிட்'
தாவரவியல் பூங்காவுக்கு 28 லட்சம் பேர் 'விசிட்'
தாவரவியல் பூங்காவுக்கு 28 லட்சம் பேர் 'விசிட்'
ADDED : ஜன 03, 2024 11:32 PM

ஊட்டி, : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு ஓராண்டில், 28 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 'கண்ணாடி மாளிகை, இத்தாலியன் கார்டன் மற்றும் பாத்திகளில் இன்கா மேரிகோல்டு, பிகோனியா, கேன்டீடப்ட், பிரன்ச் மேரிகோல்டு, பேன்சி, பெட்டூனியா, பிராக்ஸ், ஜினியா, ஸ்டாக், வெர்பினா மற்றும் புதிய ரகங்களான ஆர்னமென்டல்கேல், ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியாக்கள்,' உள்ளிட்ட, 325 வகையான ரகங்களில், 5 லட்சம் மலர்கள் கோடை சீசன் மற்றும் இரண்டாம் சீசனுக்கு தயார்படுத்தி காட்சிப்படுத்துவது வழக்கம்.
இங்கு வசீகரிக்கும் மலர்களை காண ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அதில், வெளி நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அதிகளவில் வருகின்றனர்.
தோட்டக்கலை உதவி இயக்குனர் பாலசங்கர் கூறுகையில், ''கடந்த, 2021 ல் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். 2022ல் 25 லட்சம்; 2023 ல் 28 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்கு ஏற்ப பூங்காவில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் கோடை சீசனுக்கான பணிகள் நடந்து வருகின்றன,'' என்றார்.