/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஊட்டி லோயர் பஜார் பகுதியில் 250 கே.வி., டிரான்ஸ்பார்மர்ஊட்டி லோயர் பஜார் பகுதியில் 250 கே.வி., டிரான்ஸ்பார்மர்
ஊட்டி லோயர் பஜார் பகுதியில் 250 கே.வி., டிரான்ஸ்பார்மர்
ஊட்டி லோயர் பஜார் பகுதியில் 250 கே.வி., டிரான்ஸ்பார்மர்
ஊட்டி லோயர் பஜார் பகுதியில் 250 கே.வி., டிரான்ஸ்பார்மர்
ADDED : ஜன 10, 2024 10:40 PM

ஊட்டி: ஊட்டி லோயர் பஜாரில், 250 கே.வி., டிரான்ஸ்பார்மர் கூடுதலாக அமைக்கப்பட்டதால் மின் தடை பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.
ஊட்டி லோயர் பஜார் பகுதியில், 800க்கும் மேற்பட்ட மின் சப்ளை சர்வீஸ் உள்ளது. 500 கே.வி., டிரான்ஸ்பார்மர் மூலம் மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வந்தது. காலை, மாலை நேரமான 'பீக்' ஹவர்சில் ஓவர்லோடு காரணமாக அடிக்கடி மின்சாரம் தடைப்படுகிறது.
இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் வணிக நிறுவன தொழில்கள் பாதிக்கப்பட்டது. லோயர் பஜார் பகுதி மக்கள் கூடுதலாக டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும். என, கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, 250 கே.வி., டிரான்ஸ்பார்மர் லோயர் பஜார் பகுதியில் கூடுதலாக அமைக்கும் பணி நேற்று, உதவி செயற்பொறியாளர் மோகன்ராஜ் தலைமையில் நடந்தது. 250 கே.வி., டிரான்ஸ்பார்மர் கூடுதலாக அமைக்கப்பட்டதால், லோயர் பஜார் மின் தடை பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.