Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/125 ஏக்கரில் படர்ந்துள்ள களை செடிகள்: கூடலூர் வனப்பகுதியில் அகற்றும் பணி தீவிரம்

125 ஏக்கரில் படர்ந்துள்ள களை செடிகள்: கூடலூர் வனப்பகுதியில் அகற்றும் பணி தீவிரம்

125 ஏக்கரில் படர்ந்துள்ள களை செடிகள்: கூடலூர் வனப்பகுதியில் அகற்றும் பணி தீவிரம்

125 ஏக்கரில் படர்ந்துள்ள களை செடிகள்: கூடலூர் வனப்பகுதியில் அகற்றும் பணி தீவிரம்

ADDED : ஜன 30, 2024 10:25 PM


Google News
Latest Tamil News
கூடலுார்;கூடலுார், பாடந்துறை பகுதியில், 125 ஏக்கரில் வளர்த்துள்ள பயனற்ற உண்ணி செடிகளை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கூடலுார் வனகோட்டம், யானை, காட்டெருமை, மான்கள் உள்ளிட்ட வன உயிரினங்களின் வாழ்விடமாகும். மேலும், கோடை காலத்தில், முதுமலை வனப்பகுதியில் இருந்து யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இப்பகுதிக்கு உணவு, குடிநீர் தேடி வந்து செல்வது வழக்கம்.

ஆனால், பல பகுதி வனங்களில் பயனற்ற உண்ணி செடிகள் உட்பட பல்வேறு களைச்செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், அப்பகுதிகளில், வனவிலங்குகள் விரும்பி உண்ண கூடிய தாவரங்கள் வளர முடியாத நிலை உள்ளது. பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கூடலுார் வனச்சரகத்தில் முதல் கட்டமாக, பாடந்துறை வாச்சகொல்லி ஒட்டிய, வனப்பகுதியில், 125 ஏக்கர் பரப்பளவில் வளர்ந்துள்ள உண்ணி செடிகளை, வேரோடு அகற்றும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இவற்றை அகற்றப்படுவதன் மூலம், வன விலங்குகள் விரும்பி உண்ண கூடிய தாவரங்கள் வளரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வனத்துறையினர் கூறுகையில்,'வனப்பகுதியில் களைச்செடிகள் வளர்வதன் மூலம், அப்பகுதியில் தாவர உண்ணிகள் விரும்பி உண்ணக்கூடிய தாவரங்கள் வளராது. இதற்கு தீர்வு காணும் வகையில் உண்ணி செடிகளை அகற்றி வருகிறோம். தொடர்ந்து, அப்பகுதியில் வனவிலங்குகள் விரும்பி உண்ணக்கூடிய புற்களை வளர்க்கும் திட்டமும் உள்ளது,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us