/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 11, 2024 10:36 PM

ஊட்டி : ஊட்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கூடுதல் கலெக்டர் பேரணியை துவக்கி வைத்தார். இதில், ஊட்டி செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர் மற்றும் மருத்துவர்கள், 75 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, 'தாய் மற்றும் சேய் நல்வாழ்வுக்கு சரியான வயதில் திருமணமும் போதிய பிறப்பு இடைவெளியும் சிறந்தது' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு செவிலியர் பயிற்சி பள்ளியை அடைந்தது.
பேரணியில், 'ஒவ்வொரு தம்பதியரின் பெருமை குடும்ப நலம் அதுவே வளர்ந்த இந்தியாவின் புதிய அடையாளம்' என்ற முழக்கம் எழுப்பப்பட்டது.
தொடர்ந்து உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, கோட்டாட்சியர் மகராஜ், மருத்துவ நலப்பணிகள் துறை இணை இயக்குனர் சிவக்குமார், செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் முத்துசாமி, மருத்துவ அலுவலர் ரவிசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.