/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 480 நாள் பணி முடித்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் 480 நாள் பணி முடித்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
480 நாள் பணி முடித்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
480 நாள் பணி முடித்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
480 நாள் பணி முடித்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
ADDED : ஜூலை 11, 2024 10:36 PM

ஊட்டி : நீலகிரி மாவட்ட ஊராட்சி பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட செயலாளர் தொரை தலைமை வகித்தார். பொருளாளர் ரவி, மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜூ முன்னிலை வகித்தனர்.
இ.கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் போஜராஜ், நீலகிரி ஊராட்சி பணியாளர் சங்க பொது செயலாளர் ரகுநாதன் ஆகியோர் கோரிக்கை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், 'ஊராட்சி பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம், 14,593 ரூபாய் வழங்குவது; ஊராட்சியில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கு பணிப்பதிவேடு பராமரித்து பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்; இரண்டு ஆண்டுகளில், 480 நாள் பணி முடித்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; மரணம் அடைந்த தொழிலாளர்களின் வாரிசுக்கு குடும்ப நலநிதி, 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்; அனைத்து பணியாளர்களுக்கு சீருடை, மழை கோட்டு இதர பணி பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், 'உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊழியர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.