/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சேதமடைந்த நெடுஞ்சாலை 'ஒட்டு போடும்' பணியில் பணியாளர்கள் சேதமடைந்த நெடுஞ்சாலை 'ஒட்டு போடும்' பணியில் பணியாளர்கள்
சேதமடைந்த நெடுஞ்சாலை 'ஒட்டு போடும்' பணியில் பணியாளர்கள்
சேதமடைந்த நெடுஞ்சாலை 'ஒட்டு போடும்' பணியில் பணியாளர்கள்
சேதமடைந்த நெடுஞ்சாலை 'ஒட்டு போடும்' பணியில் பணியாளர்கள்
ADDED : ஜூலை 23, 2024 11:59 PM

பந்தலுார்;பந்தலுார் அருகே சேதமடைந்த நெடுஞ்சாலையில் 'ஒட்டுபோடும்' பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பந்தலுார் தாலுகா தலைநகராக உள்ளதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அரசு தலைமை மருத்துவமனை, நீதிமன்றம் உள்ளிட்ட தேவைகளுக்கு அதிக அளவில் மக்கள் வந்து செல்கின்றனர். மேலும், 3 மாநில வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன.
இதனால், மாநில நெடுஞ்சாலையான இந்த பகுதியில் அதிகளவில் வாகனங்கள் மற்றும் மக்கள் போக்குவரத்து உள்ளது.
ஆனால், பஜார் பகுதியில் சாலை முழுமையாக பெயர்ந்து குழிகளாக மாறி வாகன டிவைரர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும், 108 உள்ளிட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேகமாக செல்ல முடியாத நிலையில் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகிறது. மழை பெய்தால் குழிகளில் தண்ணீர் நிறைந்து, இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் பாதசாரிகள் நிலைதடுமாறி விழுந்து செல்லும் அவலமும் தொடர்கிறது.
இதனால், சாலையை சீரமைத்து தர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் ஆய்வுகூட செய்யாமல், ஜல்லி மற்றும் பாறை துகள்களை கொண்டு குழிகளை பெயரளவிற்கு மூடி 'ஒட்டு போடும்' பணியில் பணியாளர்களை ஈடுபடுத்தி உள்ளனர்.
மக்கள் கூறுகையில்,'தற்போது, மழை பெய்து வரும் நிலையில் வாகனங்கள் வந்து செல்லும்போது, பாறை துகள் மற்றும் ஜல்லி கற்கள் தண்ணீரில் அடித்து செல்லப்படும் நிலையில், மீண்டும் சாலையில் குழிகள் மட்டுமே மிஞ்சும். பழுதடைந்த சாலையை முறையாக சீரமைக்காமல், மக்கள் வரிப்பணத்தை வீணாக்கும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்,' என்றனர்.