/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நெல் மூட்டைகளை சேதப்படுத்திய காட்டு யானையால் நஷ்டம் நெல் மூட்டைகளை சேதப்படுத்திய காட்டு யானையால் நஷ்டம்
நெல் மூட்டைகளை சேதப்படுத்திய காட்டு யானையால் நஷ்டம்
நெல் மூட்டைகளை சேதப்படுத்திய காட்டு யானையால் நஷ்டம்
நெல் மூட்டைகளை சேதப்படுத்திய காட்டு யானையால் நஷ்டம்
ADDED : ஜூலை 23, 2024 11:59 PM
கூடலுார்;கூடலுார் தேன்வயல் பகுதியில் வீட்டின் கதவை உடைத்த, யானை நெல் மூட்டைகளை சேதப்படுத்திய சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலுார் தொரப்பள்ளி, குனில், புத்துார்வயல், அல்லுார் வயல் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள், இரவில் குடியிருப்புக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி விடுகிறது. காட்டு யானைகளை விரட்டும் பணிகள் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேன்வயல் பகுதியில் நுழைந்த காட்டு யானை மாணிக்கம் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து, அதில் வைத்திருந்த மூன்று மூட்டை சீரக சம்பா நெற்பயிர்களை வெளியே எடுத்து சேதப்படுத்தியது. தொடர்ந்து அங்கிருந்து சென்றது. நஷ்டத்தை ஈடு செய்ய, வனத்துறை நிவாரண உதவி வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.