/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மயிலை துப்பாக்கியால் சுட்ட இரட்டை சகோதரர்கள் கைது மயிலை துப்பாக்கியால் சுட்ட இரட்டை சகோதரர்கள் கைது
மயிலை துப்பாக்கியால் சுட்ட இரட்டை சகோதரர்கள் கைது
மயிலை துப்பாக்கியால் சுட்ட இரட்டை சகோதரர்கள் கைது
மயிலை துப்பாக்கியால் சுட்ட இரட்டை சகோதரர்கள் கைது
ADDED : ஜூன் 12, 2024 10:02 PM

பாலக்காடு: மயிலை துப்பாக்கியால் சுட்டு கொன்று சமைத்து சாப்பிட்ட இரட்டை சகோதரர்களை, வனத்துறையினர் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பாலக்காயம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ், 30, ராஜேஷ், 30. இரட்டை சகோதரர்களான இவர்கள், மயிலை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையின் மாவட்ட பறக்கும் படை அதிகாரி சனூப் தலைமையிலான குழு, அவர்களது வீட்டை சோதனையிட்டது. அப்போது, துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மயிலை, சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது. இதையடுத்து, இரட்டை சகோதரர்களை கைது செய்தனர். மயிலை சுட பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.