/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மீட்கப்பட்ட சிறுத்தை உடல்நிலை முன்னேற்றம் குறித்து கண்காணிப்பு மீட்கப்பட்ட சிறுத்தை உடல்நிலை முன்னேற்றம் குறித்து கண்காணிப்பு
மீட்கப்பட்ட சிறுத்தை உடல்நிலை முன்னேற்றம் குறித்து கண்காணிப்பு
மீட்கப்பட்ட சிறுத்தை உடல்நிலை முன்னேற்றம் குறித்து கண்காணிப்பு
மீட்கப்பட்ட சிறுத்தை உடல்நிலை முன்னேற்றம் குறித்து கண்காணிப்பு
ADDED : ஜூன் 12, 2024 10:01 PM

பாலக்காடு : பாலக்காடு, அட்டப்பாடி புளியப்பதியில் சோர்வடைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு அருகே, அட்டப்பாடி வன எல்லையோரத்தில் உள்ள புளியப்பதியில், வயலில் சோர்வடைந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுத்தை இருப்பதை கண்ட மக்கள் வன துறையினருக்கு தகவல் அளித்தனர்.
வனத்துறையினர் வலையை பயன்படுத்தி சிறுத்தையை பிடித்து கூண்டில் அடைத்து, முக்காலி வன அலுவலகத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கின்றனர். வன துறையின் கால்நடை அறுவை சிகிச்சை மருத்துவர் டேவிட் ஆபிரகாம் தலைமையில் சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிறுத்தை உடல்நிலையில் முன்னேற்றும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, மருத்துவர் டேவிட் ஆபிரகாம் கூறியதாவது:
ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை, மற்ற வன விலங்குகளுடன் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட காயத்தால் சோர்வடைந்து உள்ளது. தலையை தூக்க கூட முடியாத அளவிற்கு சிறுத்தையின் உடல்நிலை மோசமாக இருந்தது.
கழுத்திலும், உடலின் மற்ற பகுதிகளிலும் காயங்கள் இருந்தது. தடுப்பூசி செலுத்தியதால், சிறுத்தை உடல் நலன் பெற்று வருகிறது. தலை தூக்கி நிற்கிறது. நிறைய தண்ணீர் குடிக்கிறது. அதே நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் இருக்கிறது.
தொடர் சிகிச்சை அளித்து வருகிறோம். உணவு உட்கொண்டால், ஆரோக்கியமடைந்து விடும். அதன்பின், சிறுத்தை அடர்ந்த வனத்தில் விடுவிக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.