/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மலையேற்ற பயிற்சி முகாம் ;மாணவ மாணவியர் பங்கேற்பு மலையேற்ற பயிற்சி முகாம் ;மாணவ மாணவியர் பங்கேற்பு
மலையேற்ற பயிற்சி முகாம் ;மாணவ மாணவியர் பங்கேற்பு
மலையேற்ற பயிற்சி முகாம் ;மாணவ மாணவியர் பங்கேற்பு
மலையேற்ற பயிற்சி முகாம் ;மாணவ மாணவியர் பங்கேற்பு
ADDED : ஜூன் 08, 2024 12:30 AM
குன்னுார்;குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில் நடந்து வரும் குழந்தைகளுக்கான தேசிய அளவிலான முகாமில், மலையேற்ற பயிற்சி நடந்தது.
குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில் நாடு முழுவதும் உள்ள ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களின் குழந்தைகளுக்கான, 10 நாட்கள் சிறப்பு சாகச பயிற்சி முகாம் கடந்த 2ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாணவ, மாணவியரின் மலையேற்ற பயிற்சி நடந்தது.
எம்.ஆர்.சி., ராணுவ மையத்தில், முன்னாள் ராணுவ அதிகாரி பிரிகேடியர் அந்தோணி தலைமை வகித்து துவக்கி வைத்தார். அதில், குன்னூர் சிம்ஸ்பார்க் உட்பட பல்வேறு இடங்களிலும் அழைத்து செல்லப்பட்டனர். முன்னதாக ராணுவ மையத்தில் மேஜர் முத்துக்குமார் முன்னிலையில் முகாமை துவக்கி வைத்தனர். ஏற்பாடுகளை மேஜர் முத்துகுமார் தலைமையில் ராணுவ வீரர்கள் செய்தனர்.