/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ விபத்தில் சிக்கிய அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கருணைத்தொகை விபத்தில் சிக்கிய அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கருணைத்தொகை
விபத்தில் சிக்கிய அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கருணைத்தொகை
விபத்தில் சிக்கிய அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கருணைத்தொகை
விபத்தில் சிக்கிய அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கருணைத்தொகை
ADDED : ஜூன் 08, 2024 12:30 AM
ஊட்டி;விபத்தில் பாதிக்கப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, கருணைத் தொகை வழங்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில், ஈஷ்ராம் தரவுத்தளத்தில், 2022 மார்ச், 31ம் தேதி வரை விவசாயம் சார்ந்த தொழில்களில், 19 ஆயிரத்து, 496; கட்டுமான தொழில்களில், 5,670 உட்பட, மொத்தம், 46 ஆயிரத்து 27 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
பதிவு செய்த தொழிலாளர்களில், விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள், இரண்டு கண்கள், கால்கள், கைகளை இழந்தவர்களுக்கு, 2 லட்சம் ரூபாய்; ஒரு கண், கை, கால்களை இழந்தவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் கருணை தொகை வழங்கப்படும். மாவட்டத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களில் உயிரிழந்திருந்தாலோ, ஊனமடைந்திருந்தாலோ, தொழிலாளர்கள் அல்லது அவர்களின் வாரிசுதாரர்கள் உதிரி மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.
தொடர்பு கொள்ளும் முகவரி: தொழிலாளர் உதவி ஆணையம் (அமலாக்கம்) அலுவலகம், 31ஏ, அப்பர் சர்ச் ரோடு, பெட்போர்டு, குன்னுார். தொலைபேசி எண்: 0423 2232108.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.