Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'ஜாப்' பள்ளியில் பயிற்சி; 6 பேருக்கு அரசு வேலை

'ஜாப்' பள்ளியில் பயிற்சி; 6 பேருக்கு அரசு வேலை

'ஜாப்' பள்ளியில் பயிற்சி; 6 பேருக்கு அரசு வேலை

'ஜாப்' பள்ளியில் பயிற்சி; 6 பேருக்கு அரசு வேலை

ADDED : ஜூன் 15, 2024 12:31 AM


Google News
பாலக்காடு;பழங்குடியின இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக, மாவட்ட ஊராட்சியால் துவங்கப்பட்ட, 'ஜாப்' பள்ளியால் ஆறு பேருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது.

பழங்குடியின இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக, கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட ஊராட்சியில், கடந்த, 2022ல் துவங்கப்பட்ட திட்டம் 'ஜாப்' பள்ளி என்ற பொது தேர்வு பயிற்சி மையம்.

பழங்குடியின நல திட்ட நிதியில் இருந்து, 25 லட்சம் ரூபாய் செலவில் கஞ்சிக்கோடு பகுதியில் துவங்கிய இந்த மையம் வாயிலாக, தற்போது ஆறு பேருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. ஏராளமானோர் பொதுப்பணி துறை தேர்வு எழுதி காத்திருக்கின்றனர். தொடர்ந்து தேர்வு எழுதுவதற்காக பயிற்சிகள் பள்ளியில் நடந்து வருகிறது.

இது குறித்து, பழங்குடியின நலத்துறை அதிகாரி ஷமீனா கூறுகையில்:

பழங்குடியின நல துறை அலுவலக பொறுப்பில் உள்ள இந்த மையத்தில், மத்திய, மாநில-, அரசின் அனைத்து பொதுத் தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இங்கு படிக்க வரும் மாணவர்களுக்கு, தங்குவதற்கான விடுதிகள், உணவு, பயண வசதிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு, தற்போது 18 -- 35 வயதுக்கு உட்பட்ட, 35 பேர் உள்ளனர். காலை, 9:30 மணி முதல் மாலை, 4:30 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது இங்கு படிக்கும் ஆறு மாணவர்களுக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. இதில் இருவருக்கு போலீஸ் மற்றும் வனத்துறையில் நியமனம் கிடைத்து உள்ளது.

நெல்லியாம்பதி போத்துப்பாறை பகுதியை சேர்ந்த சஞ்சய், தற்போது போலீஸ் முகாமில் பயிற்சி முடித்து பணியில் சேர உள்ளார். அதேபோல் பரம்பிக்குளம் குடியார்குற்றி பகுதியை சேர்ந்த சுனில், வாளையார் சரக வன அலுவலகத்தின் கீழ் உள்ள, புதுச்சேரி தெற்கு அலுவலக அதிகாரி பதவிக்கான பயிற்சியில் உள்ளார்.

வாளையார், பாம்பாம்ப்பள்ளம் பகுதியை சேர்ந்த ரதீஷ் போலீஸ் தேர்வு எழுதி பட்டியலில் 4வது இடம் பிடித்து வேலையை உறுதி செய்து உள்ளார்.

மங்கலம் அணையை சேர்ந்த சிஜோ, போலீஸ் தேர்வு பட்டியலில் ஒன்பதாவது இடமும், வாளையார் நடுப்பதியை சேர்ந்த சசி 34- வது இடமும், அட்டப் பாடி காரறை பகுதியை சேர்ந்த விக்னேஷ் 11-வது இடமும் பிடித்து வேலையில் சேர காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், மையத்தில் கூடுதல் பிரிவுகள் துவங்கி, திட்டத்தை விரிவுபடுத்த ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us