/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அரசு ஐ.டி.ஐ.,யில் சேர இன்று கடைசி நாள் அரசு ஐ.டி.ஐ.,யில் சேர இன்று கடைசி நாள்
அரசு ஐ.டி.ஐ.,யில் சேர இன்று கடைசி நாள்
அரசு ஐ.டி.ஐ.,யில் சேர இன்று கடைசி நாள்
அரசு ஐ.டி.ஐ.,யில் சேர இன்று கடைசி நாள்
ADDED : ஜூன் 12, 2024 10:29 PM
பெ.நா.பாளையம் : அரசினர் தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.,) நிலையத்தில் சேர இன்று வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், 2024ம் ஆண்டுக்கான சேர்க்கை நடந்து வருகிறது.
தொழில் பயிற்சி நிலையத்தில் சேர்வதற்கான கல்வி தகுதி எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு ஆண்களுக்கு, 14 முதல், 40 வரை என்றும், பெண்களுக்கு உச்ச வரம்பு இல்லை.
பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளர்கள் அதற்கான விண்ணப்பத்தினை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று இரவு, 12:00 மணிக்குள் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி ஏற்கனவே, 7ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது, 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற வரும் பயிற்சியாளர்களுக்கு பாட புத்தகம், வரைபட கருவிகள், லேப்டாப், சைக்கிள், பேருந்து பயணம் செய்ய இலவச அடையாள அட்டை, சீருடை, காலணிகள், மாதாந்திர உதவித் தொகை, 750 ரூபாய், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படும்.
பயிற்சியில் சேர மேலும் விபரங்களுக்கு, 86674 08507 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.