/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சிம்ஸ்பூங்காவில் இரண்டாம் சீசன் பணிகள் துவக்கம் சிம்ஸ்பூங்காவில் இரண்டாம் சீசன் பணிகள் துவக்கம்
சிம்ஸ்பூங்காவில் இரண்டாம் சீசன் பணிகள் துவக்கம்
சிம்ஸ்பூங்காவில் இரண்டாம் சீசன் பணிகள் துவக்கம்
சிம்ஸ்பூங்காவில் இரண்டாம் சீசன் பணிகள் துவக்கம்
ADDED : ஜூலை 10, 2024 02:10 AM

குன்னுார்;குன்னுார் சிம்ஸ் பூங்கவில், 2வது சீசனுக்காக ஆரம்ப கட்ட பணிகளில் தோட்டக்கலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
குன்னுார் சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் ஏப்., மே மாத கோடை சீசன் மற்றும், செப்., அக்., மாதங்களில், 2 வது சீசனில் ஏராளமான பயணிகள் வருகை தருகின்றனர்.
இரண்டாவது சீசனுக்காக இம்மாத இறுதியில் மலர் நாற்றுக்கள் நடவு பணி துவங்கப்பட உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளது. ஏற்கனவே நடவு செய்த மலர் செடிகளை அகற்றப்பட்டதுடன் பல்வேறு மலர் செடிகளில் இருந்து விதைகள் சேகரிக்கப்பட்டன. பூங்கா செடிகள் நடவு செய்யப்பட்ட இடங்கள் சமன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் தடுப்புவேலி போன்ற செடிகளை நடவு செய்யும் பணி துவங்கியுள்ளது. இதற்கான பணிகளில் தோட்டக்கலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
அதில், 'பிளாக்ஸ், ஆன்ட்ரினம், பால்சம், பெகோனியா, ஆப்ரிக்கன் மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, பேன்சி, ஹோலிஹாக், டெல்பினியம், ஜெரானியம், பெட்டுனியா, ஸ்டாக், கேலன்டுலா, கேன்டிட் ப்ட், டயான்தஸ், கிளார்கியா, ஜின்னியா, ஸ்வீட் வில்லியம்,' வெளிநாட்டு மலர்கள் உட்பட, 110 வகைகளில், 2 லட்சம் மலர் நாற்றுக்களுக்கு விதைகள் சேகரித்து, நாற்று உற்பத்தி நடந்து வருகிறது.