/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சிட்டு குருவிகளை காக்க இயற்கை பொருட்களில் கூடு பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை சிட்டு குருவிகளை காக்க இயற்கை பொருட்களில் கூடு பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை
சிட்டு குருவிகளை காக்க இயற்கை பொருட்களில் கூடு பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை
சிட்டு குருவிகளை காக்க இயற்கை பொருட்களில் கூடு பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை
சிட்டு குருவிகளை காக்க இயற்கை பொருட்களில் கூடு பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை
ADDED : ஜூலை 10, 2024 02:09 AM

ஊட்டி;நீலகிரி மாவட்ட தேசிய பசுமை படை சார்பில், ஆர்.கே., புரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், மறுசுழற்சி மற்றும் இயற்கை மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் பரிமளா வரவேற்று பேசுகையில், ''திடக்கழிவு மேலாண்மை குறித்தும், அவற்றை மதிப்பு கூட்டி அழகான பல வண்ணங்களில் கைவினை பொருட்கள் தயாரிப்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், தங்களின் தனி திறமைகளை வெளிப்படுத்தி, கற்றல் திறன் செயல்பாடுகளை மேம்படுத்த இந்த பயிற்சிகள் அவசியம்.
குறிப்பாக, தேங்காய் ஓடுகள் பாட்டில்கள், காகிதங்கள், காய்ந்த இலைகளை கொண்டு பல்வேறு பொருட்களை கொண்டு கலைப்பொருட்களை மாணவர்கள் உருவாக்கி இருப்பது சிறப்பு அம்சமாக உள்ளது,''என்றார்.
பேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசுகையில், ''ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து கட்டட கழிவுகள், மருத்துவ கழிவுகள் மற்றும் மட்காத குப்பை கழிவுகள் உட்பட அனைத்து கழிவுகளையும் மறுசுழற்சிக்கு உட்படுத்துவது அவசியம். இவ்வகை கழிவுகள் குறித்து, இளைய சமுதாய மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியமாக உள்ளது.
மேலும், இப்பள்ளியில் மூலிகை தோட்டம், பூந்தோட்டம் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த செயல்பாடுகளை மாணவர்கள சிறப்பாக முன்னெடுத்திருப்பது பாராட்டுக்குரியது. இதேபோல தங்களது வீடுகள், தெருக்கள் மற்றும் கிராமத்தை துாய்மையாக வைத்து கொள்ள முன்வர ேவண்டும். மேலும், தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் கவரும் வகையில், பூங்காவை பராமரிக்கும் மாணவர்கள் சமூகத்திற்கு முன் உதாரணமாக உள்ளனர்,'' என்றார்.
நிகழ்ச்சியில், சிட்டு குருவி இனம் அழியாமல் பாதுகாக்க இயற்கை பொருட்கள் கொண்டு கூடுகள் உருவாக்குவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. ஆசிரியர் பத்மபிரியா வரவேற்றார். நந்தினி குமாரி நன்றி கூறினார்.