/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ புதர் சூழ்ந்த நடைப்பாதை பொதுமக்களுக்கு இடையூறு புதர் சூழ்ந்த நடைப்பாதை பொதுமக்களுக்கு இடையூறு
புதர் சூழ்ந்த நடைப்பாதை பொதுமக்களுக்கு இடையூறு
புதர் சூழ்ந்த நடைப்பாதை பொதுமக்களுக்கு இடையூறு
புதர் சூழ்ந்த நடைப்பாதை பொதுமக்களுக்கு இடையூறு
ADDED : ஜூலை 16, 2024 01:29 AM

ஊட்டி;நடைப்பாதையில் இருபுறம் சூழ்ந்துள்ள புதர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுஉள்ளது.
ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு அரசு துறை அலுவலகம், தலைமை தபால் நிலையம், பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்கு வரும் பொதுமக்கள் ஸ்பென்ஷர் சாலை அருகே உள்ள நடைப்பாதையை பயன்படுத்துகின்றனர்.
அரசு ஊழியர்களும் இந்த நடைப்பாதையை பயன்படுத்துகின்றனர். நடைப்பாதையில் இருபுறம் புதர் சூழ்ந்திருப்பதுடன், பாதை நடுவே மரக்களை சாய்ந்துள்ளது.
பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவித்தும் புதர் தொங்கி கொண்டிருக்கும் மரக்கிளைகளை சீரமைக்கவில்லை. எனவே, இந்த செடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.