/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மழை நீர் வழிந்தோட தற்காலிக கால்வாய்: உள்ளூர் மக்கள் அதிருப்தி மழை நீர் வழிந்தோட தற்காலிக கால்வாய்: உள்ளூர் மக்கள் அதிருப்தி
மழை நீர் வழிந்தோட தற்காலிக கால்வாய்: உள்ளூர் மக்கள் அதிருப்தி
மழை நீர் வழிந்தோட தற்காலிக கால்வாய்: உள்ளூர் மக்கள் அதிருப்தி
மழை நீர் வழிந்தோட தற்காலிக கால்வாய்: உள்ளூர் மக்கள் அதிருப்தி
ADDED : ஜூன் 16, 2024 11:46 PM

பந்தலுார்;பந்தலுார் பஜாரில் மழை நீர் தேங்கி நிற்காமல் வழிந்தோட நிரந்தர தீர்வு ஏற்படுத்தாமல் தற்காலிக தீர்வு ஏற்படுத்தும் பணியால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
பந்தலுார் பஜார் தாலுகா தலைநகராக உள்ளதுடன், பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளதால் நாள்தோறும் வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மேலும், இப்பகுதி தமிழக கேரளா சாலையாக உள்ளதால், இரு மாநில அரசு மற்றும் தனியார் வாகனங்களும் அதிக அளவில் வந்து செல்கின்றன. பஜார் பகுதியில் கழிவு நீர் மற்றும் மழைநீர் வழிந்தோட ஏதுவாக கடந்த காலங்களில், ஐந்து இடங்களில் சாலையின் குறுக்கே கால்வாய் அமைக்கப்பட்டு இருந்தது.
அவை அனைத்தும் தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டடங்களாக மாறி உள்ளதால், மழை காலங்களில் தண்ணீர் சாலையில் நிறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில், நெடுஞ்சாலை துறை மூலம் கடந்த மாதம், 15 லட்சம் ரூபாய் செலவில், பஜாரின் மையப்பகுதியில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட கால்வாய் தரமாக அமைக்காததால் மீண்டும் தண்ணீர் தேங்கி நின்று பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்த மக்கள் அளித்த புகாரையடுத்து, ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து முறையாக கால்வாய் வசதி ஏற்படுத்துவதற்கு பதில், நெடுஞ்சாலை துறை மூலம் தற்காலிகமாக கால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது.
இதனால், மீண்டும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்து தரமாக பணி மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சுப்ரமணி கூறுகையில், ''நான் விடுப்பில் இருந்து தற்போது தான் பணிக்கு வந்துள்ளேன். இங்கு பணி மேற்கொள்வது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆய்வு செய்த பிற விபரங்களை கூறுகிறேன்,'' என்றார்.