/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சாலையோரம் உலா வந்த சிறுத்தை: மெரிலேண்ட் மக்கள் பீதி சாலையோரம் உலா வந்த சிறுத்தை: மெரிலேண்ட் மக்கள் பீதி
சாலையோரம் உலா வந்த சிறுத்தை: மெரிலேண்ட் மக்கள் பீதி
சாலையோரம் உலா வந்த சிறுத்தை: மெரிலேண்ட் மக்கள் பீதி
சாலையோரம் உலா வந்த சிறுத்தை: மெரிலேண்ட் மக்கள் பீதி
ADDED : ஜூன் 16, 2024 11:46 PM

மஞ்சூர்;மஞ்சூர் அருகே மெரிலேண்ட் சாலையில் உலா வந்த சிறுத்தையால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தை, காட்டெருமை, கரடி, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வன விலங்கு நடமாட்டத்தால் விளை நிலங்களில் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு மஞ்சூர் - ஊட்டி சாலையில் மெரிலேண்ட் பகுதியில் சாலையோரம் சிறுத்தை ஒன்று அமர்ந்திருந்தது. வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை கண்டதும் சற்று துாரம் சாலையில் மெதுவாக நடந்து சென்று வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. சிறுத்தை உலா வந்த இடம் அருகே மெரிலேண்ட் கிராமம் உள்ளது.
இதனால், அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். சிறுத்தை நடமாட்டம் பகுதியில் குந்தா ரேஞ்சர் சீனிவாசன் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.