/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அரசாணை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் அரசாணை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் அரசாணை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் அரசாணை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசாணை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் அரசாணை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசாணை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் அரசாணை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசாணை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் அரசாணை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 08, 2024 11:33 PM

அன்னுார்;அரசாணை எண் 243 ஐ, ரத்து செய்ய வலியுறுத்தி, அன்னுாரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும், ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமையை பாதிக்கும் பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வேண்டும். கலந்தாய்வு பொது மாறுதலை நிறுத்தி வைக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில், அன்னுார் வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
டிட்டோ ஜாக் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீராசாமி, தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் செந்தில்குமார் உட்பட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.