Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தமிழகத்தில் ஊடுருவியுள்ள மூன்று நக்சல்கள் தேடும் பணியில் அதிரடிப்படை போலீசார்

தமிழகத்தில் ஊடுருவியுள்ள மூன்று நக்சல்கள் தேடும் பணியில் அதிரடிப்படை போலீசார்

தமிழகத்தில் ஊடுருவியுள்ள மூன்று நக்சல்கள் தேடும் பணியில் அதிரடிப்படை போலீசார்

தமிழகத்தில் ஊடுருவியுள்ள மூன்று நக்சல்கள் தேடும் பணியில் அதிரடிப்படை போலீசார்

ADDED : ஜூலை 28, 2024 01:16 AM


Google News
Latest Tamil News
பந்தலூர்;தமிழகத்தில் ஊடுருவியுள்ள மூன்று நக்சல்களை தேடும் பணியில் அதிரடிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக - கேரளா எல்லை பகுதியான வயநாடு, மலப்புரம்,பாலக்காடு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக நக்சல்கள் நடமாட்டம் தலை துாக்கியுள்ளது. வனத்தில் முகாமிட்டு பழங்குடியின கிராமங்களுக்கு சென்று, அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடுவது, போராட்டத்திற்கு ஆதரவு கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதுடன் உணவுப் பொருட்களையும் சேகரித்து செல்கின்றனர். கேரளாவில் அரசு அலுவலகங்கள் மற்றும் சோதனை சாவடிகள் மீது தாக்குதல் நடத்தும் செயலிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

நக்சல் நடமாட்டத்தை தடுக்க எல்லையோர பகுதிகளில் அதிரடிப்படை, நக்சல் தடுப்பு பிரிவு, கேரளாவில் தண்டர்போல்ட் அதிரடிப்படை, கர்நாடகாவில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் என, வனத்தில் ஆங்காங்கே கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நக்சல் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளான மொய்தீன், சோமன், சந்தோஷ் ஆகியோர் தேர்தல் சமயத்தில், வயநாடு அருகே கம்பமலை எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்தில், தொழிலாளர்கள் மத்தியில் வந்து தேர்தலுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டு சென்றனர். இதன் மூலம் நக்சல்கள் அந்தப் பகுதியில் முகாமிட்டு தங்கி இருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நக்சல் மனோஜ் கடந்த வாரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இதில், வனத்திலிருந்து நக்சல்கள் மொய்தீன், சோமன், சந்தோஷ் எர்ணாகுளம் பகுதியிலிருந்து ரயில் மூலம் கோவை , ஈரோடு பகுதிக்கு சென்றிருக்கலாம் அல்லது வயநாடு பகுதியில் நக்சல்கள் ஆதரவாளர்களுடன் தங்கி இருக்கக்கூடும் என்ற தகவலால் மாநில அதிரடிப்படை போலீசார் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us