ADDED : ஜூலை 28, 2024 01:12 AM
ஊட்டி:ஊட்டி ரோஜா பூங்காவில், கடந்த கோடை சீசனில், 4,000 வகைகளில், 40,000 ரோஜா மலர்கள் உற்பத்தியாயின. கோடை சீசன் முடிந்தாலும் இங்கு வரும் சுற்றுலா பயணியர் ரோஜா மலர்களை ரசித்து சென்றனர்.
ஊட்டியில், சில நாட்களாக தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. மழைக்கு ரோஜா பூங்காவில் உள்ள பெரும்பாலான பாத்திகளில் ரோஜா மலர்கள் அழுகி உதிர்வதால் அவற்றை பூங்கா ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். மழையை பொருட்படுத்தாமல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணியர் ரோஜா மலர்கள் அழுகி போனதை பார்த்து திரும்பி செல்கின்றனர்.