/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மண்ணரிப்பால் திடீர் பள்ளம்; மீண்டும் சாலை துண்டிக்கும் அபாயம் மண்ணரிப்பால் திடீர் பள்ளம்; மீண்டும் சாலை துண்டிக்கும் அபாயம்
மண்ணரிப்பால் திடீர் பள்ளம்; மீண்டும் சாலை துண்டிக்கும் அபாயம்
மண்ணரிப்பால் திடீர் பள்ளம்; மீண்டும் சாலை துண்டிக்கும் அபாயம்
மண்ணரிப்பால் திடீர் பள்ளம்; மீண்டும் சாலை துண்டிக்கும் அபாயம்
ADDED : மார் 13, 2025 09:01 PM

குன்னுார்; குன்னுார் உபதலை ஊராட்சி கரோலினாவில், மழையின் காரணமாக, சாலையோர புதிய தடுப்பு சுவர் அருகே திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
குன்னுார் உபதலை ஊராட்சி, 5வது வார்டு கரோலினா மற்றும் புது காலனி பகுதிகளில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு செல்லும் சாலையோரத்தில் கடந்த ஆண்டு மண்சரிவு ஏற்பட்டதால் சாலை துண்டிக்கும் அபாயம் இருந்தது. அதிகாரிகள் ஆய்வு செய்து, 14 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பு சுவர் அமைத்தனர்.
எனினும் சாலை மற்றும் தடுப்பு சுவர் இடையே முழுமையாக சீரமைக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த நவ., மாதம் மழை பாதிப்பு ஏற்பட்டபோது, மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில் சீரமைப்பு பணிகள் துவங்கின.
எனினும், முழுமையாக சீரமைக்கப்படவில்லை. சாலையில் மழை காலத்தில் சேறும், சகதியும் நிரம்பியும், வெயில் காலங்களில் மண் துாசியாலும் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இது தொடர்பான புகாரின் பேரில், கலெக்டர் உத்தரவிட்டும், அதிகாரிகள் பெயரளவிற்கு பணிகள் மேற்கொண்டு 'போட்டோ' எடுத்து சென்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த கன மழையால் தடுப்பு சுவரில் முன்புறம் சாலையில், மண் அடித்து செல்லப்பட்டு, திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில், மழைநீர் தேங்கி விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.