/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பழங்குடியினர் வீட்டில் தண்ணீர் சுத்திகரிப்பு கருவி செயல்பாடு குறித்து விஞ்ஞானி ஆய்வு பழங்குடியினர் வீட்டில் தண்ணீர் சுத்திகரிப்பு கருவி செயல்பாடு குறித்து விஞ்ஞானி ஆய்வு
பழங்குடியினர் வீட்டில் தண்ணீர் சுத்திகரிப்பு கருவி செயல்பாடு குறித்து விஞ்ஞானி ஆய்வு
பழங்குடியினர் வீட்டில் தண்ணீர் சுத்திகரிப்பு கருவி செயல்பாடு குறித்து விஞ்ஞானி ஆய்வு
பழங்குடியினர் வீட்டில் தண்ணீர் சுத்திகரிப்பு கருவி செயல்பாடு குறித்து விஞ்ஞானி ஆய்வு
ADDED : ஜூலை 11, 2024 10:35 PM

கூடலுார் : முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் உள்ள தெற்குப்பாடி, லைட்பாடி, யானைப்பாடி கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினருக்கு, சுகாதாரமான குடிநீர் வழங்கும் வகையில், அவர்கள் வீடுகளில் தண்ணீர் சுத்திகரிப்பு கருவி அமைக்கப்பட்டுள்ளது.
தெற்குப்பாடி, பொம்மன் என்பவர் வீட்டில், அமைக்கப்பட்டுள்ள இக்கருவியின் செயல்பாடுகளை, அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, மாவட்ட கலெக்டர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'இங்குள்ள பழங்குடியினருக்கு சுகாதாரமான குடிநீர் உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு வீடுகளுக்கும் தண்ணீர் சுத்திகரிப்பு கருவி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் செயல்பாடுகளை அணு விஞ்ஞானி ஆய்வு செய்தார்.
இதன் செயல்பாடுகளின் அடிப்படையில், மற்ற பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைப்பது குறித்துமுடிவு செய்யப்படும்,' என்றனர்.