Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தொகுப்பூதியத்தில் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தொகுப்பூதியத்தில் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தொகுப்பூதியத்தில் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தொகுப்பூதியத்தில் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ADDED : ஜூலை 11, 2024 10:35 PM


Google News
ஊட்டி : மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு செவித்திறன் குறை உடையோருக்கான கம்ப்யூட்டர் ஆய்வகம், 'எல்காட்' நிறுவனம் சார்பில், ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப் பட்டுள்ளது.

ஆய்வகத்தில் பணிபுரிந்து செவித்திறன் குறை உடையோருக்கான மாணவ, மாணவியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்றுவிப்பதற்கு கம்ப்யூட்டர் பயிற்றுனர் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட உள்ளது.

கல்வி தகுதி:


இதற்கு, 'பி.எட்., கல்வித் தகுதியுடன், பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ., அல்லது பி.எஸ்சி., தகவல் தொழில்நுட்பம்,' என, ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

எனவே, இந்த கல்வி தகுதி உடையவர்கள், கார்டன் சாலையில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அலுவலகத்தில், 25ம் தேதிக்குள் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us