/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ எல்.இ.டி., எச்சரிக்கை பலகையை சீரமைக்க கோரிக்கை எல்.இ.டி., எச்சரிக்கை பலகையை சீரமைக்க கோரிக்கை
எல்.இ.டி., எச்சரிக்கை பலகையை சீரமைக்க கோரிக்கை
எல்.இ.டி., எச்சரிக்கை பலகையை சீரமைக்க கோரிக்கை
எல்.இ.டி., எச்சரிக்கை பலகையை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 24, 2024 12:20 AM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் - - ஊட்டி சாலையில் உள்ள எல்.இ.டி., எச்சரிக்கை பலகையை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில், கல்லார் அருகே முதல் கொண்டை ஊசி வளைவில், தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ஊட்டியை நோக்கி செல்லும் வாகனங்களுக்கும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வரும் வாகனங்களுக்கும் என தனி, தனியாக, வாகனங்கள் வருவதை அறிந்து கொள்ளும் வகையில் எல்.இ.டி., எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது.
கொண்டை ஊசி வளைவுக்கு அருகில் உள்ள ஆட்டோமெடிக் கேமரா, வாகனங்கள் வருவதை சென்சார் வாயிலாக அறிந்து கொண்டு, எல்.இ.டி.,எச்சரிக்கை பலகையில், வாகனங்கள் வருவது தொடர்பாக அறிவிக்கும். இதனால் கொண்டை ஊசி வளைவில் விபத்து ஏற்படுவதை தடுக்க முடியும். இதனிடையே கல்லார் அருகே ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வரும் போது உள்ள வளைவில் வைக்கப்பட்டுள்ள எல்.இ.டி., பலகையை யானை இடித்து சாய்த்து, பல மாதங்கள் ஆகிறது. இதனால் அது உபயோகம் இன்றி காணப்படுகிறது.
இந்த எச்சரிக்கை பலகையை நெடுஞ்சாலை துறையினர் சீரமைத்து தர வேண்டும் என கல்லார் பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.---