Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடினால் தகவல் தெரிவிக்கணும்

அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடினால் தகவல் தெரிவிக்கணும்

அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடினால் தகவல் தெரிவிக்கணும்

அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடினால் தகவல் தெரிவிக்கணும்

ADDED : ஜூன் 15, 2024 12:28 AM


Google News
கோத்தகிரி:'கோத்தகிரி பழங்குடியின கிராமங்களில், அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டம் இருந்தால், உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.

கோத்தகிரி காவல் நிலையம் சார்பில், கரிக்கையூர் பழங்குடியின கிராம உண்டு உறைவிடப் பள்ளியில், கிராம மக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

குன்னுார் டி.எஸ்.பி., (பொ) முத்தரசு தலைமை வகித்தார். கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜெய் முருகன், எஸ்.ஐ.,கள் யாதவ கிருஷ்ணன் மற்றும் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், 'வனப்பகுதி மற்றும் பழங்குடியின கிராமங்களில், அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டம் இருக்கும் பட்சத்தில், உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அடையாளம் தெரியாத நபர்களுக்கு எவ்வித உதவியும் செய்யாமல் இருப்பதுடன், அவர்களிடம் பணமோ அல்லது பொருளோ வாங்கக்கூடாது.

மேலும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். இதனால், பல்வேறு பிரச்னைகள் சமூகத்தில் ஏற்படுகிறது. இவ்வகை பொருட்களை பயன்படுத்துவதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

இன்றைய சூழலில் மாணவர்கள், சமூக வலைத்தளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது அவசியம். சிறார்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள், 'போக்சோ' சட்டத்தில் தண்டிக்கப்படுவது உறுதியாகும்,' என, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த முகாமில், பழங்குடியின கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us