/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குழியை மூடினால் 'பார்க்கிங்' செய்யலாம் குழியை மூடினால் 'பார்க்கிங்' செய்யலாம்
குழியை மூடினால் 'பார்க்கிங்' செய்யலாம்
குழியை மூடினால் 'பார்க்கிங்' செய்யலாம்
குழியை மூடினால் 'பார்க்கிங்' செய்யலாம்
ADDED : ஜூன் 15, 2024 12:29 AM

கோத்தகிரி;கோத்தகிரி பஸ் நிலையம் அருகே உள்ள குழியை மூடும் பட்சத்தில், வாகனங்களை நிறுத்த ஏதுவாக 'பார்க்கிங்' தளம் அமைக்கலாம்.
கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையம், காப்பாய் கடை இடையே, போலீஸ் குடியிருப்புக்கு செல்லும் வழியில் சாலையோரத்தில் குழி உள்ளது. மழை நாட்களில் இங்கு தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால், இந்த குழியில் காட்டு செடிகள் ஆக்கிரமித்து தற்போது விஷ ஜந்துகள் அதிகரித்துள்ளன.
கோத்தகிரி நகரில் நாள்தோறும் வாகன 'பார்க்கிங்' செய்வது பெரும் பிரச்ைனையாக உள்ளது. இதனால், நெரிசல் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்நிலையில், அரசுக்கு சொந்தமான காலியாக உள்ள இந்த இடத்தில் குழியை மூடும் பட்சத்தில், வாகனங்கள் நிறுத்தும் தளம் அமைக்க ஏதுவாக அமையும்.
எனவே, நெடுஞ்சாலை துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து பார்க்கிங் தளம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.