/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு; மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு; மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம்
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு; மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம்
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு; மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம்
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு; மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம்
ADDED : ஜூன் 13, 2024 11:29 PM

கூடலுார் :கூடலுார் தேவர்சோலையில் நடந்த மழைநீர் சேமிப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில், ஹோலிக் கிராஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
கூடலுார் தேவர்சோலை ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில், மழைநீர் சேகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்றைய தினம், நடந்தது.
பள்ளியில் துவங்கிய ஊர்வலத்தை பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோதரி நிஷா பாப்பச்சன் துவக்கி வைத்தார்.
ஊர்வலத்தில், மழைநீர் சேமிக்கவும்; சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர். ஊர்வலம் தேவர் சிலை நகர் வழியாக சென்று பள்ளியில் நிறைவு பெற்றது.
தேவர்சோலை எஸ்.ஜ.,கள் கோவிந்தராஜ், மோகன்ராஜ் ஆகியோர், 'வீணாக்கும் மழைநீர் சேமிப்பு அவசியம் குறித்து; சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம்,' குறித்து விளக்கினர்.ஊர்வலத்தில், தேவர்சோலை பேரூராட்சி கவுன்சிலர்கள் எமிபால், ஆண்டனி, பள்ளி பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.