ADDED : ஜூன் 13, 2024 11:29 PM
அன்னுார் : அன்னுாரில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஆதார வள மையம் திறக்கப்பட்டது.
அன்னூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நாராயணசாமி, 3.5 லட்சம் ரூபாய் செலவில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான, ஆதார வள மையம் கட்டிக் கொடுத்தார்.
இதன் திறப்பு விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் பொறுப்பு ரம்யா ராயன் வரவேற்றார். அன்னுார் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார்.
ஆதார் மையத்தை பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நாராயணசாமி திறந்து வைத்தார்.
விழாவில் தலைமை ஆசிரியர் (ஓய்வு) சித்ரா, முதுநிலை ஆசிரியர் (ஓய்வு) ஜோதிமணி உட்பட பலர் பேசினர். மேற்பார்வையாளர் வேல்விழி நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.