/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காற்றுடன் மழை: கார்கள் மீது விழுந்த மரம் காற்றுடன் மழை: கார்கள் மீது விழுந்த மரம்
காற்றுடன் மழை: கார்கள் மீது விழுந்த மரம்
காற்றுடன் மழை: கார்கள் மீது விழுந்த மரம்
காற்றுடன் மழை: கார்கள் மீது விழுந்த மரம்
ADDED : ஜூலை 27, 2024 01:48 AM

குன்னுார்:குன்னுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு எம்.ஜி., காலனி அருகே நிறுத்தி வைத்திருந்த கார்கள் மீது மரம் விழுந்தது.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதுடன் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில், அருவங்காடு எம்.ஜி., காலனி அருகே மரம் கிளைகளுடன் விழுந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு கார்கள் சேதமடைந்தன.
உபதலை அம்பிகாபுரம் பகுதியில் கனகமணி என்பவரின் வீட்டின் மீது மரம் விழுந்து வீட்டின் ஒரு பகுதி முழுவதும் சேதம் அடைந்தது.
தீயணைப்பு துறையினர் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் மக்கள் மரங்களை வெட்டி அகற்றினர்.