/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மேடும் பள்ளமான வேலிவியூ சாலை திணறும் வாகன ஓட்டிகள் மேடும் பள்ளமான வேலிவியூ சாலை திணறும் வாகன ஓட்டிகள்
மேடும் பள்ளமான வேலிவியூ சாலை திணறும் வாகன ஓட்டிகள்
மேடும் பள்ளமான வேலிவியூ சாலை திணறும் வாகன ஓட்டிகள்
மேடும் பள்ளமான வேலிவியூ சாலை திணறும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூலை 27, 2024 01:47 AM

ஊட்டி:ஊட்டி அருகே வேலிவியூ பகுதியில் மேடும் பள்ளமாகி சேதமான சாலையால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.
ஊட்டி - குன்னுார் சாலை வேலிவியூ பகுதி தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சாலை வழியாக அரசு பஸ், தனியார் வாகனங்கள் என, ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகிறது.
குன்னுார் சந்திப்பிலிருந்து வேலிவியூ வரை, 100 மீட்டர் சாலை ஆங்காங்கே மேடும், பள்ளமாக மாறியுள்ளது.
சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி ஏறுவதால் வாகனம் அடிப்படுவதுடன், கட்டுப்பாட்டை இழந்து எதிரே வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
டிரைவர்கள் கூறுகையில், 'தற்போது பெய்து வரும் மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி, மிகவும் சேதமாகியுள்ளது. வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. விபத்து அபாயத்தை தடுக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அவசர தேவைக்கு 'பேட்ச் ஒர்க்' பணியாவது மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.