/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பிரீமியர் கால்பந்து போட்டி: 44 அணிகள் பங்கேற்பு பிரீமியர் கால்பந்து போட்டி: 44 அணிகள் பங்கேற்பு
பிரீமியர் கால்பந்து போட்டி: 44 அணிகள் பங்கேற்பு
பிரீமியர் கால்பந்து போட்டி: 44 அணிகள் பங்கேற்பு
பிரீமியர் கால்பந்து போட்டி: 44 அணிகள் பங்கேற்பு
ADDED : ஜூன் 03, 2024 12:44 AM
கோத்தகிரி:கோத்தகிரி காந்தி மைதானத்தில், 44 அணிகள் பங்கேற்கும் பிரீமியர் கால்பந்து போட்டி நடந்து வருகிறது.
நீலகிரி கால்பந்து கழகத்தில், 44 அணிகள் பதிவு செய்து, 'ஏ, பி, மற்றும் சி,' என, மூன்று டிவிஷன்களாக பிரிக்கப்பட்டு, 'லீக்' சுற்று போட்டிகளில் பங்கேற்கின்றன.
இந்நிலையில், கோத்தகிரி காந்தி மைதானத்தில் நேற்று முன்தினம் துவங்கிய போட்டியில், கோத்தகிரி, ஒரசோலை, ஊட்டி, உல்லாடா, எல்லநள்ளி, ஜெகதளா முத்தநாடு பந்து உள்ளிட்ட, 11 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.
முதல் போட்டி, பிதர்காடு யுவ சைதன்யா மற்றும் நீலகிரி எப்.சி., அணிகளுக்கு இடையே நடந்தது. இதில், 4:1 என்ற கோல் கணக்கில் நீலகிரி எப்.சி., அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில், கோல்டன் ஏரோஸ் அணி, 4:1 என்ற கோல் கணக்கில், யுனெடெட் எப்.சி., உல்லாடா அணியை வென்றது.
மூன்றாவது போட்டியில், ஒரசோலை பி.எம்.எஸ்.சி., அணி, 3:1 என்ற கோல் கணக்கில், ஜெ.எஸ்.சி., ஜெகதளா அணியை வீழ்த்தியது.